Translate Tamil to any languages.

Thursday, 24 July 2014

விளம்பரங்கள் வடிவமைக்கலாம் வாங்க...


"விளம்பரம் இன்றேல் வணிகம் இல்லை" என்பது ஊடகத்துறையினர் பேணும் பொன்மொழி. குறித்த பொருளோ பணியோ (சேவையோ) மக்களிடம் சென்றடைய விளம்பரம் ஓர் ஊடகமாகும். இதனடிப்படையில் எல்லா நிறுவனங்களும் விளம்பரங்களை நாடுவதால் எத்தனையோ விளம்பர நிறுவனங்கள் சிறப்பாக (விசேடமாக) விளம்பரங்களை வடிவமைத்துக் கொடுக்கின்றன.

அவுஸ்ரேலியாவில் விளையாட்டரங்கின் குறுக்காக துடுப்பாட்டம் தொடங்குமுன் ஆணொருவர் ஆடைகளைக் களைந்துபோட்டு ஓடுகையில் காவற்றுறையில் சிக்கினார;. பத்திரிகையில் தன்னைப் பற்றிச் செய்தி வரவேண்டும் என்பதற்காக நிர்வாணமாகக் குறுக்கே ஓடியதாகக் குறித்த ஆண் காவற்றுறை விசாரணையின் போது தெரிவித்தார். விளம்பரத்திற்காக நிர்வாணமாக ஓட வேண்டுமா?

மறுபுறம் பார்த்தால் அழகர், அழகிகள் (Modelling) பயிற்சி நிலையங்கள் கூட இயங்குகின்றது. ஏன் தெரியுமா? விளம்பரங்களில் அரைகுறை ஆடையுடன் அல்லது முக்கால் நிர்வாணமாக நடிக்கவோ அழகை காட்டவோ இவர்களைப் பயன்படுத்தத்தான். இவை நமது பண்பாட்டைச் சீரழிக்கத் தூண்டும் பயற்சி நிலையங்களே!

எப்படியாயினும் விளம்பரங்கள் செய்யப்படும் போது சில ஒழுக்க நெறிகளைப் பின்பற்றத்தான் வேண்டும். மற்ற நிறுவனங்களை அல்லது மாற்று உற்பத்திகளை குறைத்தோ தூற்றியோ விளம்பரம் செய்ய முடியாது. பிறருடனோ பிற பொருட்களையோ பிற பணிகளையோ ஒப்பிட்டுத் தங்களுடையதை மிகைப்படுத்தி விளம்பரம் செய்ய முடியாது. போலியான தகவல், போலியான அடையாளங்கள் அல்லது பிறருடையதைப் போன்ற சாயல் உள்ள விளம்பரங்கள் தகுதியற்றவையாகும்.

விளம்பர வடிவமைப்பில் சான்றுப்படம், நிறுவன அடையாளப்படம், நிறுவனக் கோட்பாடு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனச்சான்றிதழ் இலக்கம், நிறுவனப் பதிவு எண் ஆகியவற்றுடன் சுருங்கிய தகவலாகப் படிக்காதவரும் புரியக்கூடியதான கருத்துக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தெளிவாக இருக்கக் கூடியதாக அமையப் பேணப்படும். இவ்விளம்பரங்கள் தெருவெளி, உயர்ந்த பார்வைக்கு உரிய தளங்கள், அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் ஆகிய அனைத்திலும் இடம் பெறலாம்.

மக்களை மயக்கி வீழ்த்தும் அல்லது மக்களை ஈர்த்துக் கொள்ளும் அல்லது மக்களைக் குழப்பத்துக்குள் உள்ளாக்கும் விளம்பர உள்ளடக்கங்கள் இல்லாதவாறு வடிவமைக்க வேண்டும். அரை குறை ஆடை அல்லது முக்கால் நிர்வாணம் (ஏன் முழு நிர்வாணம் கூட) ஆகத் தோன்றும் படங்களை அல்லது பெண்ணினத்தையோ ஆணினினத்தையோ இழிவுபடுத்தும் படங்களை அல்லது இவற்றை ஒத்த கருத்துக்களை உள்ளடக்காமல் பேணும் விளம்பரங்களே சிறந்தது.

விளம்பரம் வடிவமைக்க இத்தனை வழிகாட்டல் போதாதா? கணினி நுட்பம், நல்ல எழுத்து நடை, வெளிப்படுத்தும் ஆற்றல், உளவியல் நோக்கிலான அணுகுமுறை ஆகியன உங்களிடம் இருந்தால் விளம்பர வடிவமைப்பில் உங்களை வெல்ல எவர் வருவார். முயற்சி உடையோர் விளம்பர வடிவமைப்பில் இறங்கி வெற்றியடையலாம். ஆனால், தமிழர் கலை, பண்பாண்டைச் சீரழிக்காத விளம்பர வடிவமைப்பே, இன்றைய எமது தேவையாகும்.

10 comments :

 1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா

  வலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 2. சிறப்பான எழுத்துகள் மூலம் அருமையான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
  2. ஆனால்,வலைத்தளத்தில் எளிமையான முறையில் விளம்பரம் செய்யும் முறையை பற்றி எழுதினால்,என்னைப்போன்ற புது பதிவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.கூகுளின் ADSENSE மூலம் தமிழ் தளங்களுக்கு விளம்பரம் செய்ய முடியாமல் தவிக்கும் பதிவர்களில் நானும் ஒருவன்

   Delete
  3. பிறிதொரு பதிவில் தனியாகப் பதிவிடுகிறேன்!
   மிக்க நன்றி.

   Delete

 3. வணக்கம்!

  விளம்பரம் செய்யும் விளக்கம் அளித்தீா்
  உளமுறும் நன்றே உவப்பு!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 4. விளம்பரங்கள் சில வரம்பு மீறிக் காணப்ப் படுகின்றன
  விளம்பரம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான நீங்கள் சொன்ன நெறிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!