Blog Description

யாழ்பாவாணன் வெளியீட்டகம்: எழுதுகோல் ஏந்தியே உலகெங்கும் அறிவூட்டூவோம். வணக்கம்
 
Welcome
Yarlpavanan Publishers: Teach worldwide by holding a pen or pencil.
உளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.
மதிப்புமிக்க அறிஞர்களே! தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே!

Translate


          Translate Tamil to any languages.

Sunday, 4 October 2015

படம் (பணம்) பார்த்துப் பாப்புனைய வாருங்கள்!

ஏடுகளுக்கு எழுதி அனுப்பினால்
ஏடுகளில் வெளிவந்ததும் தெரியுமே
பாப்புனையும் ஆற்றல் என்பேன்!
போட்டிகளுக்கு எழுதி அனுப்பினால்
போட்டிகளில் வெற்றி பெற்றாலும்
பாப்புனையும் ஆற்றலை அறிவீரே!
பாப்புனையப் பலவகைப் போட்டிகளில்
படம் பார்த்துப் பா/கவிதை புனையும்
போட்டி ஒன்றும் இருக்கிறதே!
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே
படம் பார்த்துப் பா/கவிதை புனைக என்றதும்
படபடப்பு எதற்கென்று எண்ணிப் பாரும்?

படம் சுட்டுவதென்ன சொல்லுவதென்ன
படம் பார்க்கத் தூண்டுவதென்ன - அந்த
படத்தில் மின்னும் அடையாளமென்ன
படத்தைப் பார்த்ததும் பகுத்தறியப் பார்
படத்தைப் பார்த்து எண்ணிப் பார்
தோன்றும் எண்ணங்களைத் தொகுத்து
பா/கவிதை வண்ணங்களாக புனைந்து பார்
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - உங்களாலும்
படம் பார்த்துப் பா/கவிதை புனைய முடியுமே!

பாட்டோ கவிதையோ கதையோ - நீங்கள்
எத்தனையும் எழுதலாம் வெளியிடலாம் - ஆனால்
புகைப்படம் ஒன்று சொல்லும் செய்தி தானே
தீயாக உலகெங்கும் பரவுவதைப் பாரும்!
ஆசிய நாடுகளில் அதிகம் பேசப்படும்
குமுதம் அறிக்கையாளர் (Reporter) வெளியீட்டின்
அட்டைப்படம் வாசகர் கண்ணைப் பறிக்க
பெட்டைகளின் இன்றைய கோலம் கண்டீரே!

அவரவர் விருப்புக்கு ஆடை அணிவதில்
எவரும் தலையீடு செய்ய இயலாதே
எவரது கண்ணையும் பறிக்கும் வண்ணம்
சிலரது ஆடை அணிதலையே - அந்த
குமுதம் வெளியீட்டின் அட்டைப்படம் சுட்டியதே!
ஒட்டும் கால்சட்டை (லெக்கின்ஸ்) சுண்டியிழுக்க
ஒட்டாத மேல்சட்டை (ரொப்) இறக்கை விரிக்க
ஈருருளி, உந்துருளியில போகும் பொண்ணுகளே
எல்லாம் தெரியப் பறக்கலாமோ கண்ணுகளே!
என்றெல்லோ
பாப்புனையத் தெரியாத யாழ்பாவாணனும்
படம் பார்த்துப் பா/கவிதை புனைவாரென்றால்
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - உங்களாலும்
படம் பார்த்துப் பா/கவிதை புனைய முடியுமே!

'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்
படம் பார்த்துப் பா/கவிதை புனைய
போட்டி வைப்பதாய் அறிவிப்புச் செய்தனரே!
பணத் தாளைப் படமெடுத்து - அதையே
போட்டிப் படமாக வெளியிட்டு வைத்து
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - உங்கள்
எண்ணத்தில் தோன்றிய பா வண்ணங்களை
எழுதி அனுப்பக் கேட்டும் உள்ளனரே!

என்னங்க... படத்தைப் பார்த்தாச்சா...
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே
படம் பார்த்துப் பா/கவிதை புனைய வருகிறதா?
இலங்கைப் பணமாய் இருக்கே - அதுவும்
நூறு உரூபாத் தாளாயிருக்கே - அதுவும்
இலங்கை ஆளுகளுக்கு
ஒரு வேளை உணவுக்கே போதாதாமே!
என்றெழுதினால்
படத்தைப் பார்த்துப் படத்தில் எழுதியதை
படியெடுத்துப் போட்டதாய் முன்னிரு அடிகளிருக்க
பின்னிரு அடிகளில் பா/கவிதை உணர்வு
இருந்தென்ன பரிசில் கிட்டாதே!

பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - உங்களில்
"கைக்குக் கைமாறும் பணமே - உன்னை
கைப்பற்ற நினைக்குது மனமே!" என்றும்
"பணம் என்னடாப் பணம்
குணம் தானடா நிரந்தரம்" என்றும்
திரைப் பாடல் அடிகளை எழுதினாலும்
பரிசில் கிட்டாதென உணரும் எவரும்
"புதைகுழி தோண்டிப் புதைத்துப் பேணினாலும்
இரும்புக் கூட்டினில் அடைத்துப் பேணினாலும்
உழைத்துச் சேமித்த பணம் எல்லாம்
பிழைத்துக் கொள்ள உதவாமல் பறக்கிறதே!" என்று
யாழ்பாவாணனைப் போல கிறுக்கலாம் தானே!

படம் (பணம்) பார்த்துப் பா/கவிதை புனைவோரே
பணத்தை வைத்துப் பா/கவிதை புனைவதா
படத்தை வைத்துப் பா/கவிதை புனைவதா
என்றெல்லாம் எண்ணிக் குழம்பாதீர் - தங்கள்
உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை வைத்து
விரும்பிய பாவண்ணங்களில் எழுதித்தான் பாருங்களேன்!
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - இதோ
"பணத்தாளின் முதற்பக்கத்தில பானை போலிருக்கே
பணமில்லை என்றால் உணவில்லை என்பதற்காய்
பணத்தாளின் மறுபக்கத்தில காதலிக்கும் கிளிகளா
பணத்தைக் காதலிக்கும் நாமிருக்க - பணமோ
மாற்றாரைக் காதலித்து ஓடிவிடும் என்பதற்காய்
அடையாளமிட்டு அச்சடித்தாங்களோ யாரறிவார்" என்று
யாழ்பாவாணன் பாப்புனைந்த கிறுக்கலைப் போலன்றி
எளிமையாய் எழுதுவதை விட்டிட்டு - தங்கள்
எண்ணப்படி இறுக்கமாய் சுருக்கமாய் பாப்புனையலாமே!


'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடாத்தும்
படம் பார்த்துப் பாப்புனையும் போட்டி விரிப்பை அறிய
கீழ்வரும் படத்தையோ இணைப்பையோ சொடுக்குக.


http://ootru1.blogspot.com/2015/09/2015.html