Blog Description

யாழ்பாவாணன் வெளியீட்டகம்: எழுதுகோல் ஏந்தியே உலகெங்கும் அறிவூட்டூவோம். வணக்கம்
 
Welcome
Yarlpavanan Publishers: Teach worldwide by holding a pen or pencil.
உளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.
மதிப்புமிக்க அறிஞர்களே! தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே!

Translate


          Translate Tamil to any languages.

Thursday, 20 October 2016

வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 02

"எல்லோருக்கும் வணக்கம்!
இன்றைய நாளில்
எனக்கும் உங்களுக்கும்
வெற்றிகள் வந்து குவிய
இறைவன் துணை நிற்பார்!" என
Viber, Whatsup, twitter,
Facebook, g+ போன்ற குழுக்களில்
நாம்மாளுங்க இறங்கி
மற்றவங்களையும் எழுப்பிவிடுவாங்க!
நேரம், காலம் தப்பாமல்
தொல்லை தருவோருக்கு என்றே
"சொந்தமாகச் சிந்திக்காமல்
தன்திறனை வெளிப்படுத்தாமல்
நேரம், காலம் பார்த்து
மாற்றாரின் எதனையும் பொறுக்கி
மீள்பதிவு, பகிருதல் மட்டுமன்றி
படித்ததில் பிடித்ததது என்றும்
அடிக்கடி குழுக்களில் பதிவிடுவோரே
வலைப்பூ ஒன்றை ஆக்கி - அதில்
இப்படிப் பதிவிட்டால் - தங்களுக்கு
மதிப்புக் குறைந்தா போகும்?" என
ஒருவர் பாய்ந்தெழுகின்றார்! - அவர்
கூற்றுக்குப் பதிலாக - நானும்
"படித்ததில் பிடித்தது" என்றாலும்
"பார்த்ததில் விரும்பியது" என்றாலும்
பகிர்ந்தவருக்கும் பெயர் இருக்கும்
சொந்தமாகப் படைத்ததைப் பகிர
நேரம் இல்லாத போதும்
படித்ததில், பார்த்ததில்
பிடித்ததை, விரும்பியதைப் பகிர
குறைந்த நேரம் போதுமே!
எப்படியோ குழுக்களில் முடிந்ததை
வலைப்பூ ஒன்றை ஆக்கி - அதில்
பதிவிட்டும் பகிர்ந்தும் மகிழலாமே!
என்றவாறு உங்களை அழைக்கின்றேன்!
"வலைப்பூவில் எழுத வாங்க" என்றதும்
என்னைப் பார்த்து - எல்லோருமே
சிரி! சிரி! என்று சிரித்தார்கள்...
அதனைக் கண்டு - நான்
"சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் - அது
அறியாதவர்கள் தெரிவாகட்டும்...
சிந்திப்பவர்கள் சிந்திக்கட்டும் - அது
உணர்ந்தவர்கள் உரிமையாகட்டும்
தன்னம்பிக்கை இருந்தால்
நாமும் துணிந்து முன்னேறலாம்!" என்று
என் கைவண்ணத்தைக் காட்டினேன்!
"கணவனின் காலை
மனைவி பிடித்துவிட்டால்
செல்வம் பெருகும்" என
வாட்சப்பில் படித்தது நினைவில் வர
என் வீட்டில் எப்படி என
எண்ணிப் பார்த்த வேளை
"என் மனைவி செல்லமாக
காலையும் பிடித்து விடுவாள்
பதிலுக்குச் சொல்லாமலே
கன்னத்தைப் பொத்தியும் அடிப்பாள்
என் பாடு திண்டாட்டம் தான் - ஆகையால்
பிச்சைக்காரனாகவே
நான் இருந்து விடுகின்றேன்!" என
என் கைவண்ணம் வெளிப்படுத்தியதே!
"பணம் பத்தும் செய்யும்" என
பலரும் அடிக்கடி சொல்வதுண்டு...
"பணம் - எவரை
உருப்படியாக இருக்க விடுகிறது
உலக அழிவும் பணத்தாலே தான்!" என
நானும் கிறுக்கி முடித்தேன்!
சின்னப்பொடியன் யாழ்பாவாணன் தான்
சின்னதாய் மாற்றாரின் பதிவுகளை
பொறுக்கி, மாற்றிக் கிறுக்குபவரென
எண்ணிவிடாதீர்கள் - அன்றைய
பாவரசர் கண்ணதாசன் அவர்களோ
தேவாரம், திருவாசகம், திருப்புகள்,
ஔவை மற்றும் கம்பர் பாடல்கள் என
பல நூறு இலக்கியங்களில் இருந்து
எத்தனையோ முத்துக்களைப் பொறுக்கி
அத்தனையும் அள்ளித் தெளித்தாரே!
கண்ணதாசன் அவர்களின்
இடத்தை நிரப்ப - இன்று வரை
இன்னொருவர் பிறக்கவில்லையே!
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே!
அடடே! நீங்களும் தான்
அப்படி எழுதலாமென்று தான்
இப்படி எழுதினேன் - என்றாலும்
எடுத்துக்காட்டிற்கு
ஒன்றைப் பொறுக்கிப் பகிருகிறேன்!
ஊற்று வாட்சப் குழுமத்தில்
மருத்தவர் சரஸ்வதி அவர்களால்
பகிரப்பட்ட விழிப்புணர்வுச் செய்தியை
தங்களுடன் பகிருகிறேன் பாரும்!
"நம்மட உயிரைத் தான்
நாங்க பேணாமல் தான்
இருந்து விட்டு - நம்மட
சாவுக்குக் கடவுள் தான்
காரணமெனப் பழி போடலாமோ?
மின் இணைப்பு உள்ள - எந்தக்
கருவியுடனும் உடலுறவு வைக்காதீர்கள்...
ஈற்றில் உயிர் இல்லாமல் போகலாம்.
சிலவேளை
உடலும் எரிந்தும் சாம்பலாகலாம்." என
என் கருத்தையும் சொல்லிப் பகிருகிறேன்!

மக்களாய வலைத்தளங்களில் எழுதிய கிறுக்கல்களைத் தொகுத்து எழுதியது.