Translate Tamil to any languages.

Thursday, 18 January 2018

கதை சொல்லும் கவிதைகள் சில...

சான்று!
என்ர அம்மப்பாவும் பணக்காரன்
என்ர அப்பப்பாவும் பணக்காரன்
என்ர அப்பாவும் பணக்காரன்
ஆனால், நானோ பிச்சைக்காரன்!
அப்படி இருந்தும்
எவருக்கும் ஏதாவது உதவ விரும்பினேன்
அதனால் தான்
மதியுரையும் வழிகாட்டலும் வழங்குகிறேன்!
அதுகூடச் சரியோ பிழையோ
பயனீட்டியவர்கள் தான் சான்று!
பயனீட்டியவர்களின்
மகிழ்வான வாழ்வும் - அவர்கள்
குவிக்கும் வெற்றிகளுமே - எனக்கு
சான்றிதழ் ஆகும் என்பேன்!

நம்மாளுங்க திருந்துவாங்களா?
ஒரே பகலவன் ஒரே நிலவவள்
ஒவ்வொரு நாளும் விடிகிறது
நம்மாளுங்க மட்டும்
பழசுகளை எண்ணி எண்ணி
ஒவ்வொரு நாளையும்
வீணாக்குவதை விட்டிட்டு
விடிய விடியப் புதியதை எண்ணி
விடிய விடிய நல்லதை எண்ணி
நீடூழி வாழ மறந்தே வாழ்கிறாங்க!

குற்றம்
மாதவி வீசிய பூமாலை
கோவலன் கழுத்தில் விழுந்ததால்
மதுரையை எரித்தாள் கண்ணகி!

இதனையொட்டி இப்படியும் எழுதினேன்.

மாதவியும் கற்புக்கரசி தான்
அழகான ஆடற்காரி தான்
ஆண்களை
மயக்கி வீழ்த்தாதவள் தான்
ஆயினும்
அவளுக்குத் துணை வேண்டித் தான்
அரங்கிலே
அவளுக்கு வீழ்ந்த மாலையைத் தான்
ஆங்கே வீசுவேன், எவர் கழுத்தில் தான்
வீழுமோ, அவரே
தன் கணவன் என்றவள் தான்
கோவலன் கழுத்தில் மாலை விழத்தான்
மாதவியும்
கோவலனைத் துணையாக்கினால் குற்றமா?
சுற்றம் தெரிந்த
கண்ணகியின் துணைவன் தான்
உண்மை சொல்லி ஒதுங்காமையே குற்றம்!

இது ஒரு கதையல்ல, பலரது கதை!
1 - நல்ல நாயொன்று எவளோ வீசிய குழந்தையைத் தெருக்குப்பைக்குள்ளே காண்கிறது.
2 - குழந்தையைக் கண்ட நாய் வாயால் கவ்வித் தூக்கிச் செல்கிறது.
3 - வாயால் கவ்வித் தூக்கிச் சென்ற நாய், குழந்தையை மருத்துவமனைக்குச் சேர்ப்பித்து உதவுகிறது.
4 - மருத்துவமனையில் குழந்தையை மருத்துவர்கள் சோதனை மேல் சோதனை செய்கின்றனர்.
5 - மருத்துவமனையில் நாய்ப் பல் படாமலும் நோய்த் தொற்று இல்லாமலும் குழந்தை நலமாக உள்ளதாம்.

இது செய்தி, இதற்கான என் பாவண்ணம் கீழே

ஒருவர் விருப்புக்கு
ஒருவர் இணங்கியதால்
மகிழ்ந்த நேரம் கழிந்த பின்
மலர்ந்த கருவுறல் நிகழ்வு
இருண்ட பெண்ணின் கருவறையில் நிகழ
உண்மைக்குச் சான்றான தாய்மை
தெருவிற்கு எட்டாமல்
281 நாள் மறைந்த பெண்
ஈன்றெடுத்த குழந்தையை
தெருக் குப்பையிலே போட்ட பின்னர்
தப்பித்துக் கொள்ள முயன்றிருக்கிறாள்!
தெருவின் ஒரு கரையில்
உலா வந்த நல்ல நாயொன்று
எவளோ ஒருத்தி ஈன்ற பின் வீசிய
தெருக் குப்பையிலே கிடந்த குழந்தையை
கவ்வித் தூக்கிச் சென்று காப்பாற்றியே
ஆண்டவன் / இறைவன் ஆகின்றதே!
மருத்துவமனைச் செய்தியின் படி
குழந்தை நலமென்று தகவல் - ஆயினும்
குழந்தையைக் கவ்விய நாயின் பல்
குழந்தையின் உடலில் குத்தவில்லையாம்!
தெருவில் நிகழ்ந்த
வீசிய குழைந்தைக் கதை
குழந்தையைக் கவ்விய நாயின் கதை
இரண்டையும் எடுத்துச் சொல்ல
ஒளிப்படம் எடுத்துத் தந்தவரை
நன்றி கெட்ட நாயென்பதா?
பகுத்தறிவற்ற கருவி (ரோபோ) ஆளென்பதா?
வாசகரே உங்கள் முடிவு என்ன?
இப்படி எழுதிய எனக்கோ
பிள்ளைகள் இல்லை - ஊரார்
என்னை மலடனென ஒதுக்கி வைக்கையில்
இப்படி வீசிய குழந்தையை
பொறுக்கி வளர்க்க விரும்பினாலும்
கைக்கெட்டாத துயரிலே - இந்த
படங்களைக் கண்டதும் பகிர்ந்தேன் - என்
உள்ளத்தில் உருண்ட உண்மை
"தெருக் குப்பையில் போடுங் குழந்தைகளை
சிறுவர்களைப் பேணும் இல்லங்களில் போட்டால்
என்னைப் போன்ற மலடர்களாவது
எடுத்து வளர்ப்பார்கள்." என்பதே!

படத்திற்குக் கவிதை எழுதுங்கள் பார்ப்போம்
படத்தைப் பார்த்தீர்களா? நம்ம பிள்ளைகள் பூங்காக்கள் போய் காதலில் மூழ்கித் தங்களை மறந்து தவறு செய்த பின், செய்த தவறின் பரிசாகக் கிடைத்த குழந்தைகளைத் தெருவில் போட்டுச் செல்கின்றனர். இந்நிலை மேற்கத்தியப் பண்பாட்டில் இருந்து தமிழ் பண்பாட்டிற்குத் தொற்றிய நஞ்சு தான். இந்த நஞ்சுப் பழக்க வழக்கங்களைத் தமிழ் பண்பாட்டிலிருந்து விரட்ட வேண்டும். இந்தப் பணியை மேற்கொள்ளப் பாவலர்கள்/கவிஞர்கள் ஆகிய நீங்கள், உங்கள் பாத்திறம் /கவியாற்றல் மூலம் நல்ல தீர்வினை முன்வையுங்கள் பார்ப்போம்.

படத்திற்கு எழுதிய கவிதையை அனுப்ப,
கீழ்வரும் இணைப்பைச் கொடுக்குக.
https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html

No comments :

Post a comment

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!