Translate Tamil to any languages.

நுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்

உலகம் எங்கும் தூய தமிழ் பேணும் பணி என்று ஒப்பாரி வைக்கும் யாழ்பாவாணனா பிற மொழிகளில் தமிழை மொழி மாற்றிப் பகிர முன்வந்தாரா? நல்ல கேள்வி தான்!

பிற மொழிக்காரர் தமிழைக் கற்கவோ தமிழ் இலக்கியங்களைப் படிக்கவோ தமிழர் பண்பாட்டை அறியவோ தமிழ் பதிவுகளை மொழி மாற்றிப் பகிருவதன் மூலம் முடியும் தானே!

அதற்காகத் தமிழோ ஆங்கிலமோ சிங்களமோ முழுமையாகக் கற்றறியாத யாழ்பாவாணனால் கொஞ்சம் கொஞ்சம் மொழி மாற்றிப் பகிரத்தான் முடியுமே!

எனவே ஆங்கிலம், ஸ்பானிஸ், சீனமொழி (மென்டரின்), சிங்களம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனத் தங்களுக்குத் தெரிந்த எந்த மொழியிலும் தமிழ் பதிவுகளை மொழி மாற்றிப் பகிர முடியும் தானே! அப்படியாயின் கூகிள் மொழிபெயர்பானைப் (https://translate.google.com/) பாவித்து மொழி மாற்றிப் பகிர நீங்களும் முயன்று பார்க்கலாம்.

தமிழ் பதிவுகளை எத்தனை மொழிகளிலும் மொழி மாற்றிப் பகிரலாம். அதேவேளை எத்தனையோ மொழிகளிலுள்ள பதிவுகளைத் தமிழிலும் மொழி மாற்றிப் பகிரலாம். மேற்படி இருவழிகளிலும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். தங்களது முயற்சிகளுக்கு உதவும் வகையில் கூகிள் மொழிபெயர்பானைப் பாவித்து மொழி மாற்றிப் பகிர உதவும் பதிவுகளை இத்தளத்தில் தரவுள்ளேன்.