Translate Tamil to any languages.

Friday, 6 June 2014

காதலாகும் நேரம்

அவளிடம்
நான்
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
சொல்ல நினைத்தாலும் கூட
அவளுக்கு முன்னாலே
சொல்ல வரமாட்டேங்குதே...
நம் முன்னே
இப்படி
எத்தனை ஆண்கள் உலாவுகின்றனர்!
அவனிடம்
நான்
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
சொல்ல நினைத்தாலும் கூட
அவனுக்கு முன்னாலே
சொல்ல வரமாட்டேங்குதே...
நம் முன்னே
இப்படி
எத்தனை பெண்கள் உலாவுகின்றனர்!
சொல்ல வரமாட்டேங்குதே என்ற
ஆண்களே... பெண்களே...
உங்கள் உள்ளத்திலே
காதலிக்கத் தோன்றுதே தவிர
காதல் அமையவில்லையே!
நெற்றி முட்ட நேரே
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
ஆணிடமோ பெண்ணிடமோ
சொல்லத் துணிவு வந்த நேரம் தான்
காதல் அமைந்தது (காதலாகியது) என்பேன்!
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
சும்மா கேட்டுப் பார்ப்போமென
முன் பின்
அறிமுகம் இல்லாதவரிடம் கேட்டால்
விசர்/பைத்தியம் என்ற பட்டமளிப்புத் தான்
உங்களுக்குக் கிடைக்குமென்பதை
மறந்துவிடாதீர்கள்!

9 comments :

  1. வணக்கம்
    ரசிக்கவைக்கும் வரிகள்... அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அருமை ஐயா... துணிவு என்றும் எதிலிலும் வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  4. காதல் செய்வது எப்படியென ? தங்களிடம் தனியாக மெயில் அனுப்பி கேட்டுக்கொள்ளலாமோ ? அருமையாக இருந்தது.
    Killergee

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  5. அனுபவித்துப் பார்த்வர்கள் ஒத்துக்கொள்ளும்படி அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
      உங்கள் யாழ்பாவாணன்.

      Delete

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!