Translate Tamil to any languages.

Friday, 18 September 2015

முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!

தமிழ் இலக்கண ஆசிரியர் அகத்தியரும்
சிவவழிபாட்டிற்குச் செம்பிலே தேக்கிவைத்த நீரை
காகவடிவில் வந்த கணபதியார் தட்டிவிட
காவிரி ஆறான தண்ணீர்க் கதையுமுண்டே!
பிறந்த நாள், நன்நாள் என்றால் கூட
இனிக்க இனிப்புச் சிற்றுண்டியுடன்
குடிக்கப் பால்த்தேனீர் பருக நீட்டுவதும்
தமிழர் வரலாறு கூறும் பண்பாடே!

விருந்தாளிகள் குளிர்நீராய்ப் பருகுவதற்கல்ல
வீட்டிற்கு வந்தவுறவு முறியாமல் பேணவே
செம்பும் தண்ணீரும் நீட்டிய பண்பாடு - இப்ப
நம்ம வீடுகளிலே காணாமல் போய்விட்டதே!

அறிவியல், நுட்பங்களெனப் பல வழிகளிலும்
உலகம் முன்னேறிக்கொண்டே இருக்க
எங்கள் தமிழர் பண்பாடு மட்டுமே
எங்குமே பின்னேறிக்கொண்டே இருக்கிறதே!

எடுத்துக்காட்டுக்கு எந்தப் பொன்நாளாயினும் சரி
பண்பாட்டை மறந்து பணத்தை இறைத்து
எடுத்துக்கோ எடுத்துக்கோ என நீட்டுவதும்
குடிக்கப் புகைக்க வேண்டியன எல்லாமே!
கண்ட குடிகளும் கண்ட நிகழ்விலே
கண்டதையும் பால், அகவை வேறின்றி
குடிச்சுப் புகைச்சு வீழ்ந்திட்ட விளைவால்
தமிழர் பண்பாடு காற்றிலே பறக்குதே!
உறவுகளே! உலகம் முன்னேறுவதைப் பாரும்!

படங்கள்: வலை வழியே பொறுக்கி மேம்படுத்தப்பட்டவை.

சான்று:
அகத்தியர்
செம்புக் குடத்தில தண்ணீர் எதற்கு?

இப்பதிவு முற்றிலும் வகை-(4) - புதுக்கவிதைப் போட்டியிற்காக எழுதப்பட்ட எனது சொந்தப் பதிவு என்பதை உறுதிப்படுத்துகிறேன்.

இப்பதிவு "வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடாத்தும் மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015“ இற்காக எழுதப்பட்ட பதிவு என்பதை உறுதிப்படுத்துகிறேன்.

இப்பதிவு இதற்கு முன் எந்தவொரு ஊடகங்களிலும் வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன். மேலும், இப்பதிவு போட்டி முடியும் வரை எந்தவொரு ஊடகங்களிலும் வெளியிடமாட்டேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.

34 comments :

 1. வணக்கம் அய்யா!! போட்டிகவிதை அருமை! வெற்றி பெற எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!!

  நேரமிருப்பின் என் தளத்தில் என் கவிதைக்கும் தங்களின் மேலதிக கருத்தை தாருங்கள் நன்றி!!!

  ReplyDelete
  Replies

  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 2. ஹ்ம்ம்
  பரிசுபெற வாழ்த்துகள் ஐயா

  ReplyDelete
  Replies

  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 3. அருமை நண்பரே வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies

  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 4. சிந்திக்க வைக்கும் கவிதை ஐயா போட்டியில் வெற்றிவாகைசூட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies

  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 5. குடிமகன்களுக்கு நெத்தியடி தரும் கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 6. கவலைப் படத்தக்க உண்மை
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 7. நல்ல கருத்து! வெற்றி பெற வாழ்த்துகள்! நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 8. மனதில் தைத்து பதிய வைக்கும் அற்புதமான கவிதை வரிகள். அன்றைய நாள் கலாசார பெருமையையும், இற்றை நாள் சமூக அவலங்களையும், பெண்மை இழிவுபட்டு நிற்கும் நிலைமையையும் மன வேதனையுடன் வெளியிட்டிருக்கிறீர்கள். இவை சென்றடைய வேண்டியவர்களை நிச்சயம் சென்றடையும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 9. வெற்றி கிடைக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 10. காலத்தின் கோலம் என்று இதைத்தான் முன்னோர்கள் சொன்னார்களோ...????.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 11. போட்டியில் பரிசு பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 12. இது பரிசை நோக்கி எழுதப்பட்டதாக எனக்கு எண்ணத்தோன்றவில்லை. நம் கலாச்சரத்தை கண்டு வியந்த அந்நியர் நமை நோக்கி பரிகசித்து விடக்கூடாதே என்ற கவலையாலும் நம் கண்முன்னே ஒரு தலைமுறை கெடுவதைக்காணச்சகிக்காமலும் எழுந்த ஆற்றாமையையே கண்முன் காண்பிக்கிறது. வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 13. வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 14. நம் வருங்காலச் சந்ததியினர் பண்பாடு மறந்து சீரழிந்து போவதை நினைத்தால் வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. என்ன சொல்லி இவர்களைத் திருத்த? மன வேதனையை வெளிப்படுத்தும் கவிதைக்குப் பாராட்டுக்கள். வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 15. அருமையான ஆக்கம்
  இன்றைய சூழல் இது தான்.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 16. பேணிக் காக்க வேண்டிய தமிழ்ப்பண்பாடு கோணிக்கிடக்கிறது. நிமிர்க்க வேண்டியதை வலியுறுத்தும் கவிதை. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 17. வருத்தம் தரும் சீரழிவு

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!