Translate Tamil to any languages.

Thursday, 24 September 2015

எனது வலைப் பயணத்தில் இணைய அழைக்கின்றேன்.

என் மீது அன்பு காட்டும் அறிவு உள்ளங்கள் எல்லோருக்கும்
என் உள்ளம் நிறைந்த வணக்கங்கள்!

நான், எனக்கு வைத்த புனைபெயரே 'யாழ்பாவாணன்' என்பதாகும். எனது தந்தை பெயர் காசிராசலிங்கம்; என் பெயர் ஜீவலிங்கம் (என் பெயரைத் தமிழ்ப்படுத்தினால் 'உயிரழகன்' என்றமையும்); இரண்டிலிருந்தும் பொறுக்கி அமைத்த பெயரே காசி.ஜீவலிங்கம் என்பதாகும். நம்ம ஊர் வழக்கில காசிராசலிங்கம் ஜீவலிங்கம் என்று வரும். ஆனால், வலை வழியே ஜீவலிங்கம் காசிராசலிங்கம் என்று வரலாம். வலைத் தளங்களில் இந்தப் பெயர்க் குழப்பம் இருப்பதால் சற்று விளக்கினேன்.

நான் பல்கலைக்கழகம் சென்று பட்டங்கள் எதுவும் பெறாத அறிவில் சின்னப்பொடியன். என்னைப் பற்றிய எல்லாம் அறிய எனது தனியாள் தளம் மேம்படுத்திவிட்டேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அத்தளத்தைப் படித்த பின்; நான் நல்லவரா, கெட்டவரா என்பதை மட்டுமல்ல எனது அறிவை, பட்டறிவை (அனுபவம்) எல்லாம் அறிந்து கொள்ளலாம்.

எனது அறிவின் அளவு எவ்வளவு தெரியுமா? ஆடு, மாடு புல் மேயும் போது முழுமையாக மேயாது. அவை நுனிப் புல்லைக் கடித்துத் தின்பதோடு விட்டுவிடும். அதுபோலத் தான் நானும் பல துறை அறிவைப் படித்தாலும் "நுனிப் புல் மேய்ந்தளவு" கற்றிருக்கிறேன். அவை எவையென இந்த வலைப் பூவில் பார்க்கலாம்.

ஆயினும் நான் 1995 இல கணினித் துறைக்குள் நுழைந்து விரிவுரையாளராகவும் நிகழ்நிரலாக்குனராகவும் பணியாற்றி உள்ளேன். அதிலும் நான் கற்ற நுனிப் புல் மேய்ந்தளவு கணினி அறிவை, உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேணப் பாவிக்கலாமென யாழ் மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) என்ற தளத்தை அமைத்திருந்தேன். அதனையும் தற்போது மேம்படுத்தி விட்டேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அத்தளத்தைப் பார்வையிடலாம். தளம் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழில் சுருக்கம் இருக்கும்.

வலைத் தளம் நடாத்தி வருவாய் ஈட்டுறாங்களாம். அது பற்றிய தகவலைப் பகிரத் தனியாக ஒரு தளம் அமைத்துள்ளேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அத்தளத்தைப் பார்வையிடலாம்.

மேலும், அறிஞர்களின் ஒரு இலட்சம் மின்நூல்களைத் திரட்டிப் பேணும் பணியையும் தொடருகிறேன். அதேவேளை அறிஞர்களின் வலைப்பூக்களையும் திரட்டிப் பேணுகிறேன். எல்லா வலை முகவரிகளையும் உங்கள் நடைபேசிகளில் பார்வையிட வசதியாக நடைபேசி வலைத்தளம் ஒன்றையும் ஆக்கியுள்ளேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அத்தளத்தைப் பார்வையிடலாம்.

என் மீது அன்பு காட்டும் அறிவு உள்ளங்கள் எல்லோரும் மேற்காணும் தளங்களைப் பார்வையிட்ட பின்னர், தளங்களில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடாமல் தளங்கள் நிறைவு தரும் வகையில் மேம்படுத்தப்பட
வேண்டிய எல்லாவற்றையும் தெரிவிக்கலாம். எனது தளங்களின் வழியே வெளிக்கொணரும் வெளியீடுகளை பலரும் அறியும் வண்ணம் பகிர்ந்து ஒத்துழைப்புத் தருவீர்கள் என நம்புகின்றேன்.

நானோ மிளகளவாய் இருந்தாலும் நான் கற்றதோ கடுகளவாய் இருந்தாலும் எனது அறிவாற்றலை வெளிப்படுத்தவே வலைப் பக்கங்கள். ஆயினும் அரசியல், சமயம் சார்ந்த வெளியீடுகளைத் தர முடியாமைக்கு மன்னிக்கவும். எனது வலைப் பயணத்தில் இணைய அழைக்கின்றேன் என்பதை விட, என் மீது அன்பு காட்டும் அறிவு உள்ளங்கள் எல்லோருடனும் நானே இணைந்து செயற்படுகிறேன்; இணைந்து செயற்பட இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
26 comments :

 1. Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 2. வணக்கம் ஐயா! உங்கள் பணி பாராட்டிற்குறியது! எனக்கு புத்தங்கள் என்றால் உயிர்! தறவிறக்கி பார்த்தேன் முடியவில்லை! நான் கைபேசியில்தான் வலைதளம் ஆரம்பித்து எழுதிவருகிறேன்! நன்றி

  ReplyDelete
  Replies
  1. நடைபேசியில் சில தளங்கள் திறக்க இயலாது எனின் அதற்கான மென்பொருள் பதிவிறக்கக் கேட்கலாம். அவ்வாறு பதிவிறக்கிய பின் அத்தளங்கள் திறக்க இயலுமெனின் மின்நூல்களைப் பதிவிறக்கலாம்.
   தேவைப்படின் வைபர் அல்லது வாட்ஸ்அப் ஊடாக 0094750422108 என்ற இலக்கத்தில் கதையுங்கள். ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.
   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 3. தங்களின் சீரிய பணி போற்றுதலுக்கு உரியது ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 4. வாழ்த்துகள் நண்பரே... தங்களது பணி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 5. தங்களது முதல் அழைப்பிலேயே தங்களது தளத்தினைஇணைத்துவிட்டேன். அவ்வப்போது படித்துவருகிறேன். நேரமிருக்கும்போது மறுமொழி எழுதுகிறேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மதிப்புக்குரிய அறிஞரே!
   இது எனது வலைப்பக்கம் (Website) அறிமுகம், ஏற்கனவே எனது வலைப்பூ (Blog) அறிமுகம் செய்திருந்தேன். தங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.

   Delete
 6. மிக அருமை! தங்களின் பணி அளவிடமுடியாத ஒன்று!

  வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 7. தங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்........

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 8. நல்ல பணி,வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 9. Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 10. வாழ்த்துகள்! தங்கள் பணி மேம்பட! நண்பரே! அந்தத் தளங்களையும் சென்று பார்க்கின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 11. Excellant.I am looking forward to a commercial expert who can desigin my web sitte and help me in communicating in tamil.Then I can freely and fluently co operate with friends to creat a dynamic youth forrum.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.
   whenever you can contact with me, I can solve your problems. You can use viber or whatsup through 0094750422108, My Skype id - Yarlpavanan

   Delete
 12. வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete
 13. வளர்க வாழ்க பணி சிறக்கட்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Delete

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!