Translate Tamil to any languages.

Saturday, 26 September 2015

காசு/பணம் உங்களுக்காக... எப்படி... எப்படி...

வலைப்பூக்கள், வலைத்தளங்கள், கருத்துக்களங்கள் எனப் பல நடத்தும் அறிஞர்கள் பல நோக்கங்களைக் கொண்டிருக்கலாம்.
1. பட்டறிவு, படித்தறிவு எனப் பலவற்றைப் பலருக்குப் பகிரும் எண்ணம்.
2. தமது சான்றிதழ் போலக் காண்பிக்கும் எண்ணம்.
3. மக்கள் உள்ளங்களில் நல்லெண்ணங்களை விதைக்கும் எண்ணம்.
இப்படி எண்ண முடியாத எண்ணங்கள் இருந்தாலும் ஈற்றில் விளம்பரங்களைச் செய்து வருவாய் ஈட்டவும் செய்கின்றனர்.

அவ்வாறு தளங்களில் விளம்பரங்களைச் செய்து வருவாய் ஈட்ட முனைவோரின் தளங்களைப் பார்த்தீர்களா?
1. தளத்தை மேயப் போனால் விளம்பரங்கள் முன்னே வந்து குவியலாம்.
2. தளத்தை மேயப் போனால் தளத்தில் விளம்பரங்கள் நிறைந்து இருக்கலாம்.
3. தளத்தில் தட்டச்சுச் செய்தால் விளம்பரங்கள் முன்னே வந்து விழலாம்.
இப்படி எண்ண முடியாத இடையூறுகள் இருந்தாலும் கூடச் சிலர் தளங்களைப் பேணலாம். காலப் போக்கில் வாசகர் அற்று இருக்கலாம்.

இந்நிலையைக் கடந்தும் சிலர் விளம்பரங்களைச் செய்து வருவாய் ஈட்டத் தவறவில்லை. அதாவது அளவளவாகச் சில விளம்பரங்களைச் செய்து வருவாய் ஈட்டுகின்றனர். வாசகர் வருகை குறையாமலும் விளம்பரங்களைச் செய்து வருவாய் ஈட்டுவதுமாகத் தளங்களைப் பேணுவதெப்படி? அதுவா...
1. நாளுக்கு நாள் நம்பிக்கை ஊட்டும் செய்திகள் தரலாம்.
2. நாளுக்கு நாள் இன்று ஒரு தகவல் தரலாம்.
3. நாளுக்கு நாள் நகைச்சுவை / கட்டுரை / கதை / கவிதை என ஏதாவது ஒன்றைத் தரலாம்.
இப்படி நாளுக்கு நாள் வாசகர் தேடல்களுக்கு ஏற்ப நிறைவான, சுவையான பதிவுகளை வழங்குவதோடு தளத்தை விளம்பரங்களால் மூடிமறைக்காமல் பேணலாமே!

எடுத்துக்காட்டுக்காக எனது தளத்தைப் பார்வையிடுங்கள். அதன் பெயர் "காசு/பணம் உங்களுக்காக அல்லது Cash/Money For You" என்பதாகும். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எளிமையான எனது கிறுக்கலில் இத்தளத்தை வடிவமைத்துள்ளேன். உலகில் உலாவும் விளம்பர அளவுகள், அதற்கான கட்டணங்கள் தந்துள்ளேன். தளத்தின் வலப்புறம் மற்றும் கீழ்புறத்தில் விளம்பரங்களைப் பதிவு செய்துள்ளேன். நீங்கள் கீழ்வரும் பக்கங்களைப் படித்தால் விளம்பரங்களைச் செய்து வருவாய் ஈட்டத் தேவையான அடிப்படைத் தகவலைப் பெறலாம். சில விரிப்புகளைப் பதிவிறக்கியும் படிக்கலாம்.

இப்படி ஒரு வலைப்பக்கமோ வலைப்பூவோ நடாத்த அறிவு போதாததெனின் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கி ஒளிஒலிப் (Video) படங்கள் ஊடாகப் படிக்கலாம். இவ்வாறான ஒளிஒலிப் (Video) படங்களைக் கூகிளில் தேடியும் படிக்கலாம்.

முடிவாகச் சொல்வதாயின் தளத்தின் அழகு (பதிவுகள் விளம்பரங்களால் மூடுப்படாமல்...) நாளுக்கு நாள் சுவையான பதிவு, வருகை தரும் வாசகர் எண்ணிக்கை ஆகியவற்றில் கண்காணிப்பு இருப்பின் விளம்பரங்களைச் செய்து வருவாய் ஈட்ட முடியும் என்பேன்.

16 comments :

  1. முன்பு இதைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வலைவழியே விளம்பரம் இட்டு வருவாய் ஈட்டும் புதிய நுட்பங்களை http://cash4u.yarlsoft.com/ என்ற தளத்தில் பதிவு செய்யும் வேளை இங்கும் பகிருவேன்.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. Replies
    1. வலைவழியே விளம்பரம் இட்டு வருவாய் ஈட்டும் புதிய நுட்பங்களை http://cash4u.yarlsoft.com/ என்ற தளத்தில் பதிவு செய்யும் வேளை இங்கும் பகிருவேன்.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. எனக்கு புதிய செய்தி நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. வலைவழியே விளம்பரம் இட்டு வருவாய் ஈட்டும் புதிய நுட்பங்களை http://cash4u.yarlsoft.com/ என்ற தளத்தில் பதிவு செய்யும் வேளை இங்கும் பகிருவேன்.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அறிந்திருந்தாலும் செய்ய முனைந்ததில்லை..நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. வலைவழியே விளம்பரம் இட்டு வருவாய் ஈட்டும் புதிய நுட்பங்களை http://cash4u.yarlsoft.com/ என்ற தளத்தில் பதிவு செய்யும் வேளை இங்கும் பகிருவேன்.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. இதுவரை அறிந்திரா செய்தி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வலைவழியே விளம்பரம் இட்டு வருவாய் ஈட்டும் புதிய நுட்பங்களை http://cash4u.yarlsoft.com/ என்ற தளத்தில் பதிவு செய்யும் வேளை இங்கும் பகிருவேன்.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. அறியா செய்தி..! அறிய தந்திருக்கிறீர்கள் நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. வலைவழியே விளம்பரம் இட்டு வருவாய் ஈட்டும் புதிய நுட்பங்களை http://cash4u.yarlsoft.com/ என்ற தளத்தில் பதிவு செய்யும் வேளை இங்கும் பகிருவேன்.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. புதிய தகவல்கள் .
    மிக்க நன்றி சகோதரா

    ReplyDelete
    Replies
    1. வலைவழியே விளம்பரம் இட்டு வருவாய் ஈட்டும் புதிய நுட்பங்களை http://cash4u.yarlsoft.com/ என்ற தளத்தில் பதிவு செய்யும் வேளை இங்கும் பகிருவேன்.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  8. தங்களின் ஆலோசனைகள் பயனுள்ளவையே

    ReplyDelete
    Replies
    1. வலைவழியே விளம்பரம் இட்டு வருவாய் ஈட்டும் புதிய நுட்பங்களை http://cash4u.yarlsoft.com/ என்ற தளத்தில் பதிவு செய்யும் வேளை இங்கும் பகிருவேன்.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!