Translate Tamil to any languages.

Tuesday, 26 January 2016

மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்

முந்தியெல்லாம் யாழ்பாவாணன் எமது வலைப்பூக்களுக்கு அடிக்கடி வருவார். இப்பவெல்லாம் அத்தி புத்தாற் போல அருமையாக வந்து தலையைக் காட்டுகிறார் என்றெல்லாம் நீங்கள் நினைக்கக்கூடும், விரைவில் தங்கள் வலைப்பூக்களுக்கு அடிக்கடி வருவேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன். மேலும், 2016 சித்திரைப் புத்தாண்டிலிருந்து வலைப்பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூலாக்கும் பணியினைத் தொடங்கவுள்ளேன். இனி வரும் காலங்களில் நமது உறவுகள் நெருக்கமடையும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

யாழ்பாவாணன் வெளியீட்டகத்தின் பணியே மின்பொத்தகங்களை வெளியிட்டு உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவுவதாகும். இதுவரை எனது இரண்டு மின்பொத்தகங்களையும் நண்பர் 'தனிமரம்' வலைப்பூ அறிஞர் நேசனுக்காக ஒரு மின்பொத்தகத்தையும் வெளியிட்டுள்ளேன். அந்த வகையில் ஒரு மின்பொத்தகம் / மின்நூல் உருவாக்கி வெளியிட நான் மேற்கொண்ட முயற்சிகளைத் தங்களுடன் பகிரலாமென விரும்புகிறேன்.

மின்பொத்தகம் / மின்நூல் வெளியிடும் வேளை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கலாம். அந்த நோக்கம் வாசகரின் விருப்பங்களை நிறைவேற்றத் தவறுமாயின் மின்நூலோ அச்சடித்த நூலோ தோல்வியில் தான் முடியும். அதாவது, வாசகர் வாசிக்க விரும்பாத நூல்கள் எவர் கையில் தவழும்? அப்படியாயின் வாசகர் விரும்பும் நூல்கள் எப்படி இருக்கும்? வாசிப்பதால் வாசகர் மகிழ்ச்சி அடைய வேண்டும் அல்லது வாசகர் தேடல் (வாசகருக்குப் பயன்தரும் தகவல்) உள்வாங்கப்பட்டு இருக்க வேண்டும். இவ்விரண்டையும் விரும்பும் வாசகர்களுக்கு ஏற்ப மின்நூல் வெளியிட விரும்பும் எல்லோரும் தொடர்ந்து படியுங்கள்.

முதலில் மின்நூலுக்கான தலைப்பைத் தீர்மானிக்கவும். அதாவது, மின்நூலின் உள்ளடக்கத்திற்கான உயிராக அத்தலைப்பு அமையட்டும். அடுத்து மின்நூல் தலைப்பைச் சார்ந்த பதிவுகளைத் தொகுக்கவும். அடுத்துத் தாளின் அளவு, எழுத்தின் அளவு, நிறங்கள், அட்டைப் படங்கள் போன்ற நூலின் அமைப்பைத் தீர்மானிக்கவும். எல்லாம் ஒழுங்காக இருந்தால், கணினியில் தட்டச்சுச் செய்யலாம். அதற்குக் கீழ்வரும் வழிகளைக் கையாளுங்கள்.

அ) முற்பகுதித் தொகுப்பு
    1. முன் அட்டை
    2. உரிமம் (Creative Commons license)
    3. மின்நூல் பற்றிய தகவல்
இவை முறையே தனித்தனியாக PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும்.

ஆ) உள்ளடக்கத் தொகுப்பு
    4. வெளியீட்டாளர் உரை, நூலாசிரியர் உரை, ஏனைய உரைகள், நூலின் உள்ளடக்கம் (Table of contents) ஆகியவற்றை உரோம எண்ணைப் பக்க எண்களாக இட்டுத் தொகுக்கவும்.
    5. மின்நூலில் உள்வாங்கப்பட்ட பதிவுகளைத் தொகுக்கவும். ஒவ்வொரு பதிவும் புதிய பக்கத்தில் தொடங்க வேண்டும். இடைவெளிகள் இருப்பின் இடைச்செருகலாக குட்டித் தகவலை நுழைக்கலாம். இவ்வாறு இந்து அராபிய எண்ணைப் பக்க எண்களாக இட்டுத் தொகுக்கவும்.
இவை முறையே தனித்தனியாக PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும்.

இ) பிற்பகுதித் தொகுப்பு
    6. உங்கள் விருப்பப் பக்கம் (எடுத்துக்காட்டாக அடுத்த வெளியீடு பற்றிக் குறிப்பிடலாம்)
    7. பின் அட்டை
இவை முறையே தனித்தனியாக PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும்.
   
இவ்வாறு தட்டச்சுச் செய்து PDF நுட்பக் கோப்பாகச் சேமித்து வைத்த பின், எல்லாத் தனித்தனி PDF கோப்புகளையும் 1, 2, 3, 4, 5, 6, 7 என்ற ஒழுங்கில் ஒருங்கிணைத்து (Merge) ஒரே ஒரு தனி PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும். இந்தத் தனி PDF நுட்பக் கோப்பைத் தான் மின்பொத்தகம் / மின்நூல் என்கிறோம். இவ்வாறு மின்நூலாக்கத் தேவையான கணினி மென்பொருள்களைக் கீழே தருகின்றேன்.

!. Microsoft Word பாவிப்பவர்கள் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி Save as to pdf மென்பொருளைப் பதிவிறக்கிக் கணினியில் நிறுவினால் Microsoft Word இலேயே தட்டச்சுச் செய்த பின் PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கலாம்.

2. கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி AbleWord மென்பொருளைப் பதிவிறக்கி கணினியில் நிறுவினால் AbleWord இலேயே தட்டச்சுச் செய்த பின் PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கலாம்.

3. எல்லாத் தனித்தனி PDF கோப்புகளையும் 1, 2, 3, 4, 5, 6, 7 என்ற ஒழுங்கில் ஒருங்கிணைத்து (Merge) ஒரே ஒரு தனி PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கி விரும்பிய ஒரு மென்பொருளைப் பதிவிறக்கிக் கணினியில் நிறுவினால் போதும்.

4. PDF நுட்பக் கோப்பாகச் சேமித்த மின்நூலைப் பக்கம் பக்கமாக இணைய வழியில் புரட்டிப் படிக்க (பிளாஸ் வியூவரில்) கீழ்வரும் தளம் உதவுகிறது. தளத்தில் இலவசக் கணக்கொன்றைத் திறந்து முயன்று பாருங்கள். (மாதிரிக்கு எனது http://fliphtml5.com/homepage/insb பக்கத்தைப் பார்த்தால் புரியும்)
இத்தளத்தை எப்படிக் கையாள்வது பற்றி ஒளிஒலி (Video) பதிவினூடாகக் கற்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

5. தங்கள் மின்நூலை எவரும் எந்நேரத்திலும் பதிவிறக்க வசதியாக இணையச் சேமிப்பகத்தில் பேணலாம். அதற்குக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கி விரும்பிய ஒரு தளத்தில் சேமிக்கலாம்.

6. இனித் தங்கள் வலைப்பூவில் நீங்கள் தயாரித்த மின்நூலை அறிமுகம் செய்யலாம். தங்கள் மின்நூலை வலைப்பூவில் விரித்துப் பார்க்கக் கீழ்வரும் படிகளில் இறங்குக.
எடுத்துக்காட்டாகக் கூகிள் ட்ரைவில்:
1. தங்கள் மின்நூலைப் பதிவேற்றுக
2. Public on the Web எனச் share செய்க
3. பின் pdf கோப்பை preview செய்க
4. வலப்பக்க மேல் பட்டியில் Pop-out ஜச் சொடுக்குக.
5. பின் More actions menu ஜச் சொடுக்கி Embed item ஜச் சொடுக்குக.
6. காண்பிக்கப்படும் நிரலைப் படி எடுக்குக.
7. அதனைத் தங்கள் வலைப்பூவில் பதிவு செய்யும் இடத்தில் Html ஜச் சொடுக்கி நிரல் பகுதியில் ஒட்டினால் போதும்.
இச்செயலைப் படங்களுடன் பார்வையிடக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்குக.

உங்கள் வலைப்பூவில் இவ்வாறு உங்கள் மின்நூலை அறிமுகம் செய்த பின்னர் google+, facebook, twitter, linkedin ஆகிய தளங்களிலும் வலைத்திரட்டிகள் மூலமும் வெளியிட்டுப் பரப்ப இயலும். உங்கள் நண்பர்கள் உங்கள் மின்நூலைத் திறனாய்வு (விமர்சனம்) செய்து தங்கள் வலைப்பூக்களில் அறிமுகம் செய்தால் மேலும் உங்கள் வெளியீடு சிறப்படையும்.

இம்மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றிய மேலதிகத் தகவலை ஆங்கில மொழியில் படிக்க கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்குக.

30 comments :

 1. வலைப்பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூலாக்கவுள்ள
  தங்களின் பணி சிறப்பாக அமையவும் வெற்றி பெறவும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   மின்நூல் வெளியிட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவினைப் பகிர்ந்து உதவுங்கள்!

   Delete
 2. பயன் தரும் அருமையான விளக்கம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   மின்நூல் வெளியிட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவினைப் பகிர்ந்து உதவுங்கள்!

   Delete
 3. Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   மின்நூல் வெளியிட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவினைப் பகிர்ந்து உதவுங்கள்!

   Delete
 4. அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   மின்நூல் வெளியிட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவினைப் பகிர்ந்து உதவுங்கள்!

   Delete
 5. விளக்கமும் வழிகாட்டுதலும் அருமை அய்யா.... தொடருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   மின்நூல் வெளியிட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவினைப் பகிர்ந்து உதவுங்கள்!

   Delete
 6. மின் நூலாக்க வழிமுறைகளை பகிர்ந்தமைக்கு நன்றி! பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள பகிர்வு! உங்களின் ஆக்கப்பூர்வமான பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   மின்நூல் வெளியிட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவினைப் பகிர்ந்து உதவுங்கள்!

   Delete
 7. பயனுள்ள நிறைய விடயங்கள் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   மின்நூல் வெளியிட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவினைப் பகிர்ந்து உதவுங்கள்!

   Delete
 8. நண்பரே மிகவும் பயனுள்ள தகவல்! மட்டுமல்ல தங்கள் பணியும் மிகச் சிறப்பானது. கூடிய விரைவில் உங்களை நண்பர் ஒருவரின் கவிதைத் தொகுப்பிற்காக தொடர்பு கொள்கின்றோம்.

  மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   மின்நூல் வெளியிட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவினைப் பகிர்ந்து உதவுங்கள்!

   Delete
 9. எளிமையான நீண்ட கருத்துக்கள் விடுபடா வண்ணம் கோர்வையாய் அளித்திருக்கின்றீர்கள்! பாராட்டுக்குரிய செயல்! இதற்கு உழைப்பு அதிகம்! நேர்த்தியாக செய்யவேண்டும்! கவனமுடன் செயல்பட்டிருக்கின்றீர்கள்! தலை வணங்குகின்றேன்... நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   மின்நூல் வெளியிட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவினைப் பகிர்ந்து உதவுங்கள்!

   Delete
 10. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
  முயன்று பார்க்கிறேன்
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   மின்நூல் வெளியிட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவினைப் பகிர்ந்து உதவுங்கள்!

   Delete
 11. மின்நூல் பற்றிய பல தகவல்களோடு, அதன் ஆக்கம் பற்றி அறியச் செய்தமைக்கு நன்றி! படிப்படியாக ஒரு வலைத்தளம் அமைப்பது எப்படி என்று சொல்வதைப் போல , ஒரு மின்நூலை நாமே எப்படி வடிவமைப்பது, எப்படி வெளியிடுவது என்று உரைத்த பாங்கு சிறப்பாக இருந்தது.

  வலைத்தள தொழில்நுட்பக் கட்டுரைகளின் வரிசையில் இன்னொரு அத்தியாயத்தை தொடங்கி வைத்தமைக்கு வாழ்த்துக்கள். வாழ்க உமது தமிழ்ப்பணி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   மின்நூல் வெளியிட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவினைப் பகிர்ந்து உதவுங்கள்!

   Delete
 12. பயனுள்ள தகவல். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   மின்நூல் வெளியிட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவினைப் பகிர்ந்து உதவுங்கள்!

   Delete
 13. அரிய பணி. மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியுள்ளீர்கள். செய்து பார்க்க விருப்பம். காலம் கிடைக்கட்டும்.. தொடர்க தங்கள் பணி. வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   மின்நூல் வெளியிட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவினைப் பகிர்ந்து உதவுங்கள்!

   Delete
 14. பயன்மிக்க பகிர்வு எனக்கு இந்த மின்நூல் தொழில்நுட்பம் இன்னும் காணல்நீர் தான்,.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   மின்நூல் வெளியிட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவினைப் பகிர்ந்து உதவுங்கள்!

   Delete
 15. வணக்கம்
  யாவருக்கும் மிகவும் பயன் தரும் பதிவு நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   மின்நூல் வெளியிட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவினைப் பகிர்ந்து உதவுங்கள்!

   Delete

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!