Translate Tamil to any languages.

Sunday, 14 August 2016

வாழ்வில் எதற்கும் கருவியா? (கருத்து மோதல்)

எங்கட பிள்ளைகளின் கண்டு பிடிப்பை நீங்களும் படித்துப் பாருங்களேன். தொழில்நுட்ப வளர்ச்சியும் இவர்களது எண்ணங்களும் எப்படி மாறிவிடுகிறது. இதன் பின்விளைவு எப்படி இருக்கும்?

புதியகண்ணகி: அடியே! நீ திருமணம் செய்தால் கணவருக்கு உடுப்புத் துவைத்தல், சமைத்தல், குழந்தை பெறல், குழந்தைக்கு உணவூட்டல் என ஓய்வின்றிய வேலை இருக்குமே!

புதியமாதவி: இப்பதானே எல்லாவற்றுக்கும் கருவி (எந்திரன்) வந்துவிட்டது.

புதியகண்ணகி: குழந்தை பெறவும், குழந்தைக்கு உணவூட்டவுமா?

புதியமாதவி: ஆம்! குழந்தை பெற வாடகைத் தாயை ஒழுங்கு செய்வேன். குழந்தைக்கு உணவூட்டக் கருவி (எந்திரன்) தயாரிக்கிறாங்களாமே!

நம்மாளுகளுக்கு உணவூட்டக் கருவி (எந்திரன்) தயாரிக்கிறாங்க என்றால் எவ்வளவு மகிழ்ச்சி. கீழ்வரும் படத்தைச் சொடுக்கிப் பாருங்கள். பின் இப்பதிவின் கீழுள்ள கேள்விக்குப் பதில் கருத்தைப் பகிர்ந்து உதவுங்க."Technology is for our ease and to make us lazy!" என்ற கருத்தோடு "https://www.facebook.com/laughingcolours/videos/vb.173770089577/10153987847449578/?type=2&theater" என்ற இணைப்பில் முகநூலில் பகிரப்பட்ட ஓளிஒலி (வீடியோ) இணைப்பையே மேலே காண்கின்றீர்.

இன்று வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் கருவி (எந்திரன்) வந்துவிட்டது. ஆயினும், நம்மாளுங்க சோம்பேறி (lazy) ஆகிறாங்க. அதைவிடக் கருவிச் (எந்திரன்) செயற்பாடு அல்லது அதனுடன் தொடர்புள்ள தொழில்நுட்பம் நமக்குப் பாதுகாப்பானதா? அதனைச் சிந்திக்க வைக்கவே மேற்காணும் ஓளிஒலி (வீடியோ) இணைப்பை உங்களுடன் பகிர விரும்பினேன். இது பற்றிய உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

என் கருத்து: "அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு" என்று முன்னோர் கூறியதை நினைவூட்டுகிறேன். அதாவது, எதற்கெடுத்தாலும் கருவியை (எந்திரனை) நாடுவது பாதுகாப்பு இல்லை. மலம் கழித்தால் கழுவுவதற்கும் உடல் நாறினால் குளிப்பாட்டுவதற்கும் பசித்தால் உணவூட்டுவதற்கும் கருவியை (எந்திரனை) நாடினால்; கருவியில் (எந்திரனில்) தவறு நிகழ்ந்தால் நம்மாளுங்க உயிரைப் பறித்துவிடுமே! தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முன்னேறினாலும் நம்மாளுங்க உயிரைப் பறிக்க இடமளிக்கும் கருவியைப் (எந்திரனைப்) பாவிக்காமல் இருப்பதே நன்மை தரும்.

8 comments :

 1. ஏற்கனவே நம் குழந்தைகள் ஓடியாடும் விளையாட்டை மறந்துவிட்டார்கள். நிஜ மனிதர்களின் நட்ப்பை மறந்து விட்டார்கள். உண்மையான விளையாட்டை மறந்ததால், இன்றைய குழந்தைகளுக்கு விரல்கள் சரிவர இயங்குவதில்லை என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். கணினியில் வீரர்களில் விளையாடும் குழந்தையிடம் ஊசியில் நூல் கோர்க்க சொன்னால் முடியாமல் திணறுகிறார்கள். இது விரல்கள் போதிய பயிற்சி பெறாததே காரணம் என்கிறார்கள். இப்படியே போனால் ஒரு நிலையில் உடலின் எந்த உறுப்பும் இயங்காமல் போய்விடும். அதனால் எந்திரனை அவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதே நல்லது.

  ReplyDelete
 2. சமூக பொருளாதார வளர்ச்சி ஒரு புறம். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு புறம். உலகமயமாக்கல் ஒரு புறம். இந்நிலையில் தாங்கள் கூறுவதிலிருந்து நாம் தப்பமுடியாது என்றே எண்ணத்தோன்றுகிறது.

  ReplyDelete
 3. அப்பவே...தோழர் சாப்ளின் ..இந்தக் கருவிகளை எள்ளி நகையாடிவிட்டார்.

  ReplyDelete
 4. வலிப்போக்கன் சொல்வது போல் சார்லி சாப்ளின் படம் ஒன்று கூட உண்டு. நன்றாயிருக்கும். என் எஸ் கிருஷ்ணன் பாடலும் ஒன்று உண்டு.

  ReplyDelete
 5. இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் தேவையான பதிவு நண்பரே.உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட உடற் பயிற்சியும் மனப் பயிற்சியும் அவசியம் வேண்டும்.கால்குலேட்டரைக் கையில் எடுத்த மாணவர்கள் மனக்கணக்கு என்பதை மறந்து போனார்கள் என்பது உண்மை.

  ReplyDelete
 6. எந்திரன் மனிதனை எந்திரன் ஆக்கிவிடும் அபாயம்! நல்ல பதிவு!

  ReplyDelete
 7. வலிப்போக்கன் கருத்தையும், செந்தில் அவர்களின் கருத்தையும் வழி மொழிகின்றோம்..

  ReplyDelete

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!