Translate Tamil to any languages.

Saturday, 28 December 2019

கவிதையோ பாடலோ புனைக



வாருங்க நீங்கள்தான் பாருங்க சூழலையே
சேருங்க கெட்டவற்றை எல்லாம்தான் - தாருங்க
சூழலையே மாற்றவல்ல சிந்தனையைத் தான்திரட்டிச்
சூழலைமாற் றத்தான்பாத் தா!
                          (இரு விகற்ப நேரிசை வெண்பா)

யார்தான் தெருச்சுற்றிப் பார்த்தால்தான் காணலாமாம்
பார்த்தும்கண் மூடவைக்கும் நம்இணைகள் - யார்எவர்தான்
ஊர்க்காரர் கண்படாமல் தாம்தெருவில் கூத்தடிப்பாம்
ஊர்காதில் எட்டட்டும் பாடு!
                          (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

ஒட்டிப்பார் அங்குமிங்கும் கெட்டிக்கா ரர்கள்தான்
முட்டிமோதித் தான்குடியாம் பார்புகையாம் - எட்டிப்பார்
தட்டிக்கேட் கத்தான்யார் கிட்டவரு வார்காண்பீர்
எட்டட்டும் ஊர்காதில் பாடு!
                          (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

பாருங்க சூழலைத்தான் யாருங்க குப்பையாக்க
யாருங்க நோயுற்றுச் சாகத்தான் - பாருங்க
சூழலைத்தான் மாற்றியழ காக்கினால்தான் மாற்றம்தான்
சூழலில் வந்திடப்பாத் தா!
                          (இரு விகற்ப நேரிசை வெண்பா)

1 comment :

  1. சூழல் மாசடைவதை திருத்துவதற்காக புதுவருடத்தில் கூறப்பட்ட வரிகள் சிறப்பு. என்ன சொல்லியும் இலங்கையில் மக்கள் திருந்த வேண்டுமே

    ReplyDelete

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!