Translate Tamil to any languages.

Saturday, 4 April 2020

பயன்மிகு ஒருங்குகுறியும் (Unicode) குரல் வழித் தட்டச்சும் (Voice to Typing)

2020 தை பிறந்தால் நல்வழி பிறக்கும் என்றோர்க்கு covid-19 கொரோனா வைரஸ் வந்து இறப்புகளை விதைக்கும் என்றெவரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் வீட்டிற்குள்ளே இருப்பது covid-19 கொரோனா வைரஸ் எம்மைத் தாக்காது பாதுகாக்கவே! பாதுகாப்பாக வீட்டில் இருப்போர் ஆக்கபூர்வமான பொழுதுபோக்கை மேற்கொண்டால் உளநெருக்கடியைத் தவிர்க்கலாம். பத்திரிகை படிப்பதோடு நின்றுவிடாமல் படைப்புகளை ஆக்கலாம்; ஊடகங்களுக்கு அனுப்பி வெளியிட்டு வைக்கலாம்; வலைப் பக்கங்களில் வெளியிடலாம்; உள நிறைவைப் பெறலாம்.

வலை ஊடகங்கள் - முதற் பகுதி
வலை ஊடகங்கள் - இரண்டாம் பகுதி

வலை ஊடகங்கள் பற்றித் தெரிந்துகொள்ள இரண்டு ஒளியும் ஒலியும் (வீடியோ) வெளியிட்டுள்ளேன். அதனைப் பார்த்த பின் புதியவர்களும் வலைப்பக்கம் வந்திணையலாம். அவர்களுக்காக இந்தப் பதிவு. இருப்பினும் நாம் இவற்றைக் காண்பித்துப் புதிய வலைப்பதிவர்களை உருவாக்குவோம். பழைய வலைப்பதிவர்களையும் மீள இயங்க வைப்போம். 2021 இலாவது வலைப்பதிவர் சந்திப்பை நிகழ்த்தலாம்.

ஒருங்குகுறியைக் (Unicode) கையாளத் தெரிந்துகொள்வதனால் வலை ஊடகங்களைக் கையாள்வது இலகுவாகும். நான் NHM converter, Tamil99 Keyboard பாவிக்கிறேன். எவ்வாறு ஒருங்குகுறியைக் (Unicode) கையாளலாம் என்பதைக் கீழுள்ள ஒளியும் ஒலியும் (வீடியோ) ஊடாக விளக்கியுள்ளேன். நீங்களும் பார்வையிட்டுத் தங்கள் மதியுரையைப் பகிரலாம்.நான் ஒருங்குகுறி (Unicode) பற்றிய ஒளியும் ஒலியும் (வீடியோ) பதிவைப் பகிர்ந்த போது, எனக்குக் கிடைத்த இணைப்பு இது. நான் சுட்டிக்காட்டிய தளங்களை விட, இத்தளம் சிறப்பு எனப் பலரும் சொல்ல இடமுண்டு. ஆம்! அதாவது விரைவாக (வேகமாக) இயங்குவதே சிறப்பு. மேலும் அதிக எழுத்துருக்களை மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு. இதனை வலைப்பதிவர்கள், விக்கிப்பீடியர்கள், மென்பொருள் ஆக்குநர்கள் (SW Developers) யாவரும் அறிந்த  நீச்சல்காரன் அவர்களே தயாரித்துள்ளார்.

"நான் சொல்வதெல்லாம் நடைபேசி / கணினி தட்டச்சுச் செய்வதனால் எனக்குத் தட்டச்சுச் செய்கின்ற வேலையே கிடையாது." என எத்தனையோ அறிஞர்கள் சொல்லும் தொழில்நுட்பத்தை நானும் கீழ்வரும் ஒளியும் ஒலியும் (வீடியோ) ஊடாக விளக்கியுள்ளேன். நீங்களும் பார்வையிட்டுத் தங்கள் மதியுரையைப் பகிரலாம்.நான் குரல் மூலம் தட்டச்சுச் செய்யலாம் என ஒளியும் ஒலியும் (வீடியோ) பதிவைப் பகிர முன்னரே உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் நன்கறிந்த திண்டுக்கல் தனபாலன் அவர்கள் அறிமுகம் செய்துவிட்டார். திருக்குறளுடன் திரைப்பாடலுடன் உள்ளத்தில் அமைதியை வரவைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான அவரது பதிவையும் படித்துப் பயன்பெறுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.


பதிவர்களாகிய நாம் covid-19 கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வைப் பகிர்ந்து எல்லோரையும் காப்பாற்ற முயல்வோம்.

12 comments :

 1. நல்லது. இது ஒரு புதிய முயற்சி. தக்க நேரத்தில் முயற்சித்து பார்க்கிறேன்.

  தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  அத்துடன், தங்களது இந்த பதிவும் வலைத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

  உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  ReplyDelete
 2. ஆம் டிடி யும் பதிவிட்டிருக்கிறார். உங்கள் பதிவும் பயனுள்ள பதிவு.

  கீதா

  ReplyDelete
 3. பயனுள்ள பகிர்வு. முயற்சித்துப் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 4. நல்லதொரு முயற்சி. பின்னர் முயற்சிக்க வேண்டும்.

  ReplyDelete
 5. பயனுள்ள பதிவு அய்யா வாழ்த்துகள்

  ReplyDelete
 6. நான் தட்டச்சு செய்ய இவ்வளவு ரிஸ்க் எல்லாம் எடுப்பதில்லை ... நமக்கு இருக்கவே இருக்கு "கூகுள்இன்புட் டூல்ஸ்" ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete
 7. குரல் மூலம் தட்டச்சுச் செய்யும் இந்த தொழில் நுட்பமானது உங்களைப் போன்று பேச்சுத்திறமை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுடையதாக அமையும் ... ஆனால் என்னைப்போன்ற உளறுவாயர்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான் ... ஹஹஹா .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete
 8. ஹஹா ...ஹஹா ... "கொரானா வைரஸ் கொல்லுதையா பாரய்யா" ... காணொளி அருமை .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete
 9. thanks for share information with us.!!

  post is very good, i like it, and thanks so much...
  Best digital Marketing company in noida

  ReplyDelete

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!